முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு [Knee replacement surgeries] உலக அளவில் முன்னணி ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இப்போது ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது.
அங்கு, ரோபோ ஒரு நோயாளியின் முழங்காலின் விரிவான 3D மாதிரியை உருவாக்க முடியும், எந்த கீறல்களும் செய்யாமல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குத் தேவையான உடலின் பகுதியை விரிவாகக் காட்டுகிறது.
இது மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் அறுவை சிகிச்சை திட்டங்களை உருவாக்கவும், குணமடையும் நேரத்தை விரைவுபடுத்தவும் அனுமதிக்கிறது.
விக்டோரியாவைச் சேர்ந்த 73 வயது பெண் Doreen Nicholson, மெல்பேர்ணின் Fitzroyயில் உள்ள St Vincent’s தனியார் மருத்துவமனையில் இந்த புதிய ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தார்.
புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியாவில் முதல் நபர் இவர்தான்.