நியூ சவுத் வேல்ஸின் மத்திய வடக்கு கடற்கரையில் வெள்ள நெருக்கடி தொடர்வதால், ஆயிரக்கணக்கான காப்பீட்டு கோரிக்கைகள் ஏற்கனவே குவிந்துள்ளன.
Mid North Coast, Hunter மற்றும் Greater Sydney பகுதிகளிலிருந்து 3644 கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் காப்பீட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதில் சுமார் 80 சதவீதம் தனிப்பட்ட சொத்து உரிமைகோரல்கள், மீதமுள்ளவை வணிக அல்லது மோட்டார் உரிமைகோரல்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல சமூகங்கள் நீண்ட மீட்பு செயல்முறையைத் தொடங்கும்போது, மதிப்பீட்டாளருக்காகக் காத்திருக்காமல் தங்கள் சொத்தை சுத்தம் செய்யத் தொடங்கலாம் என்று பாலிசிதாரர்களுக்கு ICA நினைவூட்டியுள்ளது.
மக்கள் தங்கள் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் குறிப்புகளுடன் ஆவணப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் விரைவில் ஒரு கோரிக்கையை தாக்கல் செய்யுமாறும் வலியுறுத்தப்படுகிறார்கள்.
செவ்வாய்க்கிழமை முதல் தாரியில் உள்ள Taree Leagues விளையாட்டுக் கழகத்தில் ஒரு காப்பீட்டு மையம் செயல்படும்.
வெள்ளத்தால் குறைந்தது 10,000 சொத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக SES மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.