விக்டோரியாவின் மிகப்பெரிய Fosterville தங்கச் சுரங்கத்தை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கையில் விக்டோரியன் திட்டமிடல் அமைச்சர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 1,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கு $1.3 பில்லியன் சேர்க்கும் என்றும் Fosterville Gold Mine தெரிவிக்கப்பட்டுகிறது.
சுரங்கத்தின் நிலத்தடி செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும், குறைந்தது இன்னும் 10 ஆண்டுகளுக்கு சுரங்கத்தைத் தக்கவைக்கத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் திட்டங்கள் நடந்து வருகின்றன.
இருப்பினும், சுரங்க நடவடிக்கைகள் தங்கள் வீடுகளுக்கு சேதம் விளைவிப்பதாகவும், இரவில் தங்களுக்கு மிகுந்த இரைச்சலாக இருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த நவம்பரில் ஏற்பட்ட 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இந்த நடவடிக்கைகளால் ஏற்பட்டன. இதனால் 12 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தமை கவனிக்க வேண்டிய விடயமாகும்.
