Sydneyசிட்னியை உலுக்கிய சமீபத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

சிட்னியை உலுக்கிய சமீபத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

-

சிட்னியை உலுக்கிய சமீபத்திய துப்பாக்கிச் சூட்டை NSW காவல்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைச்சர் Yasmin Catley கண்டித்துள்ளார். மேலும் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நகரின் மேற்கில் பலமுறை சுடப்பட்டதில் இரண்டு ஆண்கள் காயமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5.10 மணியளவில் ஒரு காரில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருந்தவர்களைக் கண்டுபிடிக்க அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலேயே துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்திலேயே, Merrylands West-இல் உள்ள Sherwood தெருவில் ஒரு கார் மற்றும் மரம் தீப்பிடித்து எரிவதை போலீசார் கண்டுபிடித்தனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைத்தனர், இருப்பினும் வாகனம் எரிந்து நாசமானது. இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் அல்லது தொடர்புடைய காட்சிகள் உள்ள எவரும் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திங்கட்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில், Condell Park-இன் Dalton avenue-இல் உள்ள 23 வயதான John Versace வீட்டிற்கு வெளியே, மார்பு மற்றும் வயிற்றில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். அவரது கொலை CCTVயில் பதிவாகியுள்ளது .

Latest news

அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடியதாக ட்ரம்ப் குற்றம்

ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடியுள்ளதாக ரஷ்யா மீது ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்க, இராணுவ கல்விக்கூடத்தில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இதுவரை கண்டிராத மோசமான வறட்சி

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள விவசாயிகள், தாங்கள் இதுவரை கண்டிராத மோசமான வறட்சியை எதிர்கொண்டு வருவதாகவும், இதனால் கூடுதல் உதவியைக் கோருவதாகவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் . அடிலெய்டில் இருந்து...

ஆஸ்திரேலியாவில் கட்டிடம் மற்றும் கட்டுமானத் துறையில் சரிவு

வீட்டுவசதி நெருக்கடியின் காரணமாக அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, கட்டிடம் மற்றும் கட்டுமானத் துறை தற்போது அதிக வீடுகளைக் கட்ட வேண்டிய கடுமையான அழுத்தத்தில்...

சுறா கட்டுப்பாட்டிற்கு மிகப்பெரிய நிதி முதலீடு

வரலாற்றில் மிகப்பெரிய நிதி முதலீடான சுறா கட்டுப்பாட்டுக்காக குயின்ஸ்லாந்து அரசாங்கம் 88 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த சுறா கட்டுப்பாட்டு மேலாண்மைத் திட்ட முன்மொழிவின் முக்கிய நோக்கம்,...

ஒரு வாரமாக நிலவி வந்த குழப்பத்தைத் தொடர்ந்து இன்று சிட்னியில் இலவச ரயில் பயணம்

ஆஸ்திரேலியாவின் மிகவும் பரபரப்பான ரயில் வலையமைப்பு, மேல்நிலை கம்பி பழுதடைந்து பல நாட்கள் தாமதமானதால் ஏற்பட்ட பயணிகளின் அசௌகரியங்களை ஈடுசெய்ய கட்டணமில்லா பயணத்திற்கு தயாராகிவருகிறது. திங்கட்கிழமை, அனைத்து சிட்னி ரயில்கள், விமான நிலைய...

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரத்தில் குப்பைத் தொட்டிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

மறுசுழற்சியை ஊக்குவிக்கும் முயற்சியாக, பெர்த் நகரம் சிவப்புக் கழிவுத் தொட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே அவர்களின் குப்பைகளை...