Newsதெற்கு ஆஸ்திரேலியாவில் $40 மில்லியன் செலவில் திறக்கவுள்ள புதிய Safari Resort

தெற்கு ஆஸ்திரேலியாவில் $40 மில்லியன் செலவில் திறக்கவுள்ள புதிய Safari Resort

-

தெற்கு ஆஸ்திரேலியா தனது சுற்றுலா சலுகைகளை விரிவுபடுத்த 40 மில்லியன் டாலர் செலவில் ஆப்பிரிக்க கருப்பொருள் கொண்ட ஒரு புதிய Safari Resort இன்றை திறக்க உள்ளது.

Monarto Safari Park-ஆனது ‘ஆப்பிரிக்காவின் காட்டு பிரதேசத்தின்’ அனுபவங்களை பார்வையாளர்களுக்கு வழங்கும்.

Resort-இற்கு வருகை தரும் மக்கள் உண்மையான ஆப்பிரிக்க காடுகளின் Safari அனுபவங்களை பெறுவார்கள் என Resort நடத்துனர் Chris Tallent கூறினார்.

இந்த Resort பூங்காவின் சில பகுதிகளுக்கு பிரத்யேக அணுகலை வழங்குகிறது. இதனால் விருந்தினர்கள் ஆப்பிரிக்க வனவிலங்குகளைக் பார்வையிடமுடியும். 

நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு தெற்கு ஆஸ்திரேலியாவை விடுமுறை இடமாக மாற்ற இந்த Resort உதவும் என்று Premier Peter Malinauskas கூறினார்.

நாளை இரவுக்கும் அடுத்த சில வாரங்களுக்கும் கிட்டத்தட்ட எல்லா அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என Resort தரப்பில் இருந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest news

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

விக்டோரியாவில் அறிமுகமாகும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஆம்புலன்ஸ்

நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Neuro-Inclusion Toolkit ஆம்புலன்ஸ் விக்டோரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நரம்பியல் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் இருந்தே மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

மேற்கு விக்டோரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது நபர்!

Bendigo-இற்கும் Horsham-இற்கும் இடையிலான மேற்கு விக்டோரியன் நகரமான St Arnaud-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் Kings...