Perthவாடகைக்கு அதிகமாக கட்டணம் வசூலித்த வீட்டு உரிமையாளருக்கு அபராதம்

வாடகைக்கு அதிகமாக கட்டணம் வசூலித்த வீட்டு உரிமையாளருக்கு அபராதம்

-

வீட்டுவசதி நெருக்கடிக்கு மத்தியில் வாடகைச் சட்டங்களை மீறியதற்காக வீட்டு உரிமையாளருக்கு பெர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் $8,500 அபராதம் விதித்துள்ளது.

தெற்கு புறநகர்ப் பகுதியான ஆர்ட்ராஸில் குத்தகைதாரர் குடியேறுவதற்கு முன்பே அவரிடமிருந்து அவரிடம் முதல் மூன்று மாத வாடகைக்கு முன்பணம் $16,200 மற்றும் மற்றொரு பாதுகாப்பு வைப்புத்தொகை $16,200 கேட்டிருந்தார் வீட்டின் உரிமையாளர்.

ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் கூடுதலாக $2,700 வாடகை செலுத்தாவிட்டால், குத்தகைதாரர்களை வெளியேற்றுவதாக அவர் மிரட்டியதாகவும் நீதிமன்றத்தில் தெரியவந்தது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி John McMaster கூறுகையில், இது ஒரு குறிப்பிடத்தக்க சட்ட மீறலாகும் என்றும், வீட்டு உரிமையாளர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பே வாடகை கோருவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த உண்மைகளின் காரணமாக, நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அவரை நான்கு சட்டவிரோத நடத்தை குற்றச்சாட்டுகளின் பேரில் பெர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வரவழைத்து அபராதம் விதித்தது.

நீதிமன்றத்தில் தனக்கு சட்டம் பற்றி தெரியாது என்று அவர் கூறிய போதிலும், குத்தகைதாரர்கள் மற்றும் உரிமையாளர்கள் இருவரும் தங்கள் சட்டப் பொறுப்புகள் மற்றும் உரிமைகள் குறித்து அறிந்திருப்பது அவசியம் என்று மாஜிஸ்திரேட் Donna Webb கூறினார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...