Newsவரும் வாரத்தில் மோசமான வானிலைக்கு தயாராக இருக்குமாறு WA எச்சரிக்கை

வரும் வாரத்தில் மோசமான வானிலைக்கு தயாராக இருக்குமாறு WA எச்சரிக்கை

-

முடிவடையும் இலையுதிர் காலத்திற்குப் பிறகு, மேற்கு ஆஸ்திரேலியாவின் முதல் குளிர் காலம் இந்த வார இறுதியில் ஆரம்பிக்கவுள்ளது.

இதனால் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியர்களுக்கு மோசமான வானிலை புதியதல்ல. கடந்த ஆண்டில் மட்டும் Bunbury-ஐ ஒரு சூறாவளி தாக்கியது மற்றும் Perth Hills-இல் ஒரு microburst ஏற்பட்டது.

ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, அடுத்த வாரம் இந்த மோசமான வானிலை தன் வேலையை காட்ட ஆரம்பிக்கும் என்றும், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைத் தயார் செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த வாரத்தில் 100 மில்லிமீட்டர் வரை பெய்யும். ஆனால் எங்கு அதிகம் பாதிக்கப்படும் என்பதை முன்னறிவிப்பாளர்களால் சரியாகச் சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர் வானிலை நிபுணர்கள்.

மக்கள் தங்கள் வீட்டைச் சுற்றியும், முற்றத்தைச் சுற்றியும் சுத்தம் செய்யுமாறும், மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய மரங்கள், மரக்கிளைகளை அகற்றுமாறும் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தப் புயல் நிலைமை வடமேற்கு முனையிலிருந்து தென்கிழக்கு வரை நீண்டு மூன்று நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...