சிட்னியின் மேற்கில் உள்ள ஒரு வீட்டின் முன்பக்கத்தில் கார் மோதியதில் 18 மாத குழந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைகள் உடனே குழந்தைக்கு சிகிச்சைகள் அளித்தன. பின்னர் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் Westmead-இல் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரை ஓட்டிச் சென்றது 28 வயதுடைய பெண் ஒருவர் என்று போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பெண் கடைகளில் இருந்து திரும்பி வந்து வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கட்டாயப் பரிசோதனைக்காக அவர் வெஸ்ட்மீட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடபெறுவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.