Sydneyசிட்னியில் எரியும் வீட்டிலிருந்து கனப்பொழுதில் உயிர் தப்பிய இரு நபர்கள்

சிட்னியில் எரியும் வீட்டிலிருந்து கனப்பொழுதில் உயிர் தப்பிய இரு நபர்கள்

-

சிட்னியின் வடமேற்கில் உள்ள தங்கள் எரியும் வீட்டிலிருந்து கூரை இடிந்து விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இரு நபர்கள் வீட்டிலிருந்து தப்பித்துள்ளனர்.

அந்த நொடிப்பொழுதில் எடுத்த முடிவு அவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட பின்னர், தீயணைப்பு வீரர்கள் கேமரன் அவென்யூவிற்கு விரைந்தனர்.

வீடு தீப்பற்றிய சமயத்தில் இரண்டாவது மாடி படுக்கையறை ஜன்னலிலிருந்து குதித்துவிட்டு, Joe-உம் Fua-உம் வீட்டிலிருந்து ஓடியுள்ளனர். Fua மூச்சு விட முடியாமல் விழித்ததாகவும், தன் நண்பனை அழைத்ததாகவும் Joe கூறினார்.

அவர்களின் சக வீட்டுக்காரர் Sumit கீழே உள்ள மரக்கட்டைக்கு நெருப்பை மூட்டியுள்ளார். அவர் அதை சரியாக மூடிவிட்டதாகவும், அது சாதாரணமாக எரிந்து கொண்டிருந்ததாகவும் அவர்கள் கூறினார். எனினும் இதிலிருந்து தான் தீ பரவியிருக்ககூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த குளிர்காலத்தில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அவசர சேவைகள் அமைச்சர் Johad Dib தெரிவித்ததோடு மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தினார்.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...