Newsவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி

-

தெற்கு ஆஸ்திரேலியாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட மத்திய-வடக்கு பிராந்தியத்தில் உள்ள Fischer-iல் உள்ள ஒரு பண்ணையை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு கூடுதலாக 2 மில்லியன் டாலர் கூட்டாட்சி நிதியுதவியை அறிவித்தார்.

நான்காம் தலைமுறை விவசாயிகளான Troy மற்றும் Lette Fischer-இற்குச் சொந்தமான வறட்சியால் பாதிக்கப்பட்ட உள்ளூர் பண்ணையின் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஒரு வருடத்தில் சராசரியாக பெய்யும் மழை இந்த வருடம் சற்றி குறைவாகவே பெய்துள்ளதென உள்ளூர் விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த கூடுதல் மத்திய நிதியானது விவசாயிகளுக்கான ஆதரவு சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

“இந்த கூடுதல் நிதியானது, நிதி ஆலோசனையைப் பயன்படுத்த அனுமதிக்கும், ஏழை விவசாய மக்களுக்கு அதிக ஆதரவை வழங்கும்” என்று அல்பானீஸ் கூறினார்.

2025 தேசிய வறட்சி மன்றம் Mildura-இல் இருந்து Gawler-இற்கு மாற்றப்படும் என்பதையும் அல்பானீஸ் உறுதிப்படுத்தினார். மேலும் தேசிய வறட்சி மன்றம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Latest news

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் ஒருவர் பதவி ஏற்பு

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்....

அவசரமாக திரும்பப் பெறப்பட்ட பிரபலமான குழந்தை தயாரிப்புக்கள்

கண்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பிரபலமான Bunjie Probiotic Baby Eye Wipes-ஐ அவசரமாக திரும்ப பெற உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர்...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு இலவச Broadband Speed Boost

வரும் நாட்களில் 2.7 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிகங்கள் இலவச Broadband Speed Boost-ஐ பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து வீடுகளும் வேகமான இணைய...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு இலவச Broadband Speed Boost

வரும் நாட்களில் 2.7 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிகங்கள் இலவச Broadband Speed Boost-ஐ பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து வீடுகளும் வேகமான இணைய...

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்

லண்டன் பப்பில் பாலியல் வன்கொடுமை மற்றும் மது அருந்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 40...