Newsபிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

-

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன் பிரான்ஸ் மேற்கொண்டுள்ள பொருளாதார உறவைக் கண்டித்து கிரீன்பீல் என்ற அமைப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மேலும், ரஷ்யாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக துண்டிக்காத பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கிரெவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சென்ற பொலிஸார், சிலையை மீட்டு மீண்டும் அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தனர்.

உக்ரைன் உடனான போருக்குப் பிறகு, ரஷ்யாவில் இருந்து பிரான்ஸ் இறக்குமதியை அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2021ம் ஆண்டை காட்டிலும் 2023இல் உரங்களின் இறக்குமதி 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...