Newsகுயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

-

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் அதை அவளிடையதே என உறுதிப்படுத்தியுள்ளனர்.

Gin Gin இலிருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பயண தூரத்தில், Good Night Scrub தேசிய பூங்காவிற்கு அருகில் அடர்ந்த புதர்களால் சூழப்பட்ட சாலையில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மனித உடல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

17 வயது சிறுமி, மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தனது காதலனைப் பார்க்க மே 15 அன்று Bundaberg விமான நிலையத்திலிருந்து விமானத்தில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தார்.

ஆனால் அவள் விமானத்தில் பயணம் செய்யவில்லை என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உடலை முறையாக அடையாளம் காண மேலும் தடயவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று குயின்ஸ்லாந்து துப்பறியும் ஆய்வாளர் Craig Mansfield தெரிவித்தார்.

இருப்பினும், 17 வயது சிறுமியின் சாமான்கள் மற்றும் தொலைபேசியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், Pheobeன் வீட்டுத் தோழர்களான James Woods (34) மற்றும் அவரது கூட்டாளி anika Bromley (33) ஆகியோர் கடந்த வியாழக்கிழமை இரவு Bundaberg-வில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது கொலை மற்றும் பிற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Latest news

சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றன 3 விக்டோரியன் நகரங்கள்

விக்டோரியாவில் உள்ள மூன்று நகரங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றுள்ளன.இந்த போட்டியில் விக்டோரியாவில் உள்ள 25 நகரங்கள் வருடாந்திர சிறந்த...

Influenza B வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் Influenza B வைரஸ் தொற்று சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் Influenza-இற்கான ஒத்துழைப்பு...

டீன் ஏஜ் கணக்குகளுக்கு Meta எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளைஞர்களின் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த Meta மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது இளைஞர்களைப் பாதுகாப்பற்ற அல்லது தேவையற்ற இணைப்புகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் செய்தி...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

பெண்களின் மாதவிடாய் தொடர்பான மறைக்கப்பட்ட ஆபத்துகள்

மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சை (MHT) நிறுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியப் பெண்கள்...