NoticesObituaryமரண அறிவித்தல் - திரு. தம்பு இந்திரசாமி

மரண அறிவித்தல் – திரு. தம்பு இந்திரசாமி

-

யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா – கான்பராவை (Canberra) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு இந்திரசாமி அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு – செல்லம்மா அவர்களின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம் – புவனேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான குமாரசாமி, மகாதேவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சரோஜா (ஆஸ்திரேலியா), அவர்களின் பாசமிகு கணவரும், ஹேமா (ஆஸ்ரேலியா, Canberra), ரேகா (அவுஸ்ரேலியா, Adelaide) ஆகியோரின் பாசமிகு தந்தையும், செந்தூரன் (ஆஸ்திரேலியா, Canberra) அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, சின்னையா அவர்களின் அன்பு மைத்துனரும், கோமதி (இலங்கை), பானுமதி (கனடா), வளர்மதி (ஆஸ்திரேலியா), சண்முகதாசன் (இலண்டன்), அழகுமதி (இலங்கை) ஆகியோரின் தாய் மாமனும், தரண்யா, ஹரேஷன், அஞ்சலி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் சுழிபுரம் பொன்னாலையில் உள்ள இல்லத்தில் 09-06-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் பொன்னாலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- சரோஜா-மனைவி, ஹேமா – மகள், ரேகா – மகள்

தொடர்புகளுக்கு:

+61 43 195 0442

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...