NewsHIV சிகிச்சையில் ஆஸ்திரேலிய ஆய்வாளர்களின் ஒரு அரிய கண்டுபிடிப்பு

HIV சிகிச்சையில் ஆஸ்திரேலிய ஆய்வாளர்களின் ஒரு அரிய கண்டுபிடிப்பு

-

ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் குழு ஒன்று, HIV சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

HIV பாதிப்புக்குள்ளானவர்களின் உடலுக்குள் காணப்படும் சில வெள்ளை அணுக்களுக்குள் இந்த HIV வைரஸ் மறைந்துகொள்ளும். ஆகவே, அந்த வைரஸை எந்த மருந்தும் எதுவும் செய்யமுடியாது.

இந்நிலையில், மெல்பேர்ணிலுள்ள Peter Doherty Institute for Infection and Immunity என்னும் நிறுவனத்தின் ஆய்வாளர்கள், வெள்ளை அணுக்களுக்குள் மறைந்துள்ள HIV வைரஸை வெளியே தெரியவைக்கும் ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

அப்படி அந்த வைரஸை வெளியே தெரியவைத்துவிட்டால், பிறகு அதை உடலிலிருந்து அகற்றமுடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. 

கோவிட் காலகட்டத்தில் கொரோனாவைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட mRNA technology என்னும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் இந்த விடயம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

முதன்முறையாக, ஒரு சிறிய, குறிப்பிட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட வடிவமைக்கப்பட்ட கொழுப்பு குமிழியில் mRNAவை அடைத்து, அதை HIV மறைந்திருக்கும் அணுக்களுக்குள் அனுப்பமுடியும் என்பதை ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர். 

பின்னர் அந்த mRNA, HIV வைரஸை வெளிப்படுத்துமாறு வெள்ளை அணுக்களுக்கு அறிவுறுத்துகிறது. உலகளவில், கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் HIV யுடன் வாழ்கின்றனர்.

அவர்கள் தங்கள் உடலுக்குள் இருக்கும் வைரஸ் வெளிப்படாமல் கட்டுப்படுத்துவதற்காகவும், அறிகுறிகள் தோன்றாமல் இருப்பதற்காகவும், HIV பரவாமல் தடுப்பதற்காகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

அதுவே பலருக்கு ஆபத்தாக முடிந்துவிடுவதும் உண்டு. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் HIV பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக ஐ.நா அமைப்பின் எய்ட்ஸ் பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...