புதிய அரசாங்க பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ், ஆரம்பக் கல்வி மையங்களுக்கு (Early Education Centres) ஒரு புதிய சட்ட அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஆரம்பக் கல்வி மையங்களில் நிகழும் துஷ்பிரயோக சம்பவங்கள் அல்லது குழந்தைகள் மீதான தாக்குதல்கள் குறித்த புகார்கள் 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்பட வேண்டும்.
குழந்தைகளின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவு செய்யும் சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பான தெளிவான விதிமுறைகளை மையத்தில் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் எடுக்கும் போதும், படம் எடுக்கும் போதும் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் புதிய பரிந்துரைகள் கூறுகின்றன.
மேலும், குழந்தைகளைப் பாதுகாக்கவும், ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றவும் 16 புதிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு பாதுகாப்பான பள்ளி சூழலை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், மாநில கல்வி அமைச்சர்களின் ஒப்புதல் பெற்ற பிறகு இந்த புதிய விதிகள் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் Jess Walsh கூறினார்.