Newsகுடலில் 52 ஆண்டுகள் Toothbrush உடன் வாழ்ந்த நபர்

குடலில் 52 ஆண்டுகள் Toothbrush உடன் வாழ்ந்த நபர்

-

வயிற்று வலியால் அவதிப்பட்ட 64 வயது நபரின் குடலில் Toothbrush இருந்ததைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த Toothbrush அவரின் குடலில் 52 ஆண்டுகள் இருந்திருக்கிறது.

சீனாவைச் சேர்ந்த யாங் என்பவர் வயிற்று வலியால் வைத்தியசாலைக்கு சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் குடலில் Toothbrush இருந்ததை கண்டறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து 80 நிமிடங்களில் அந்த Toothbrush-ஐ அகற்றி உள்ளனர்

யாங் தனது 12 வயதில் Toothbrush-ஐ விழுங்கியதாகவும் இது குறித்து தனது பெற்றோரிடம் சொல்ல பயந்ததாகவும் கூறியிருக்கிறார்.இதுவரை எந்தவிதமான அசாதாரணமும் தனது உடலில் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு நோயாளியின் செரிமான அமைப்பிலிருந்து ஒரு பொருளை அகற்ற வைத்தியசாலையில் எடுத்துக் கொண்ட மிக நீண்ட நேரம் இது என்றும் வைத்தியர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வைத்திய நிபுணர்களின் கூற்றுப்படி, ”குடலில் இருக்கும் Toothbrush அங்கும் இங்கும் நகர்ந்து, திசுக்களை துளைத்து, குடல்களை துளைத்து உயிருக்கு ஆபத்தான நிலையைக்கூட ஏற்படுத்தக் கூடும்.

ஆனால் யாங்கின் விடயத்தில் இந்த Toothbrush அதிர்ஷ்டவசமாக குடலின் ஒரு வளைவில் சிக்கிக் கொண்டது. அதனால்தான் அந்த Toothbrush 52 ஆண்டுகளாக அவரது வயிற்றில் அசையாமல் இருந்துள்ளது.

இதனால்தான் அவரின் உடலில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. இது நம்ப முடியாத ஒன்றாக இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...