Breaking NewsHack செய்யப்பட்ட லிபரல் கட்சியின் Facebook மற்றும் Instagram கணக்குகள்

Hack செய்யப்பட்ட லிபரல் கட்சியின் Facebook மற்றும் Instagram கணக்குகள்

-

கட்சியில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்து Sussan Ley ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு லிபரல் கட்சியின் Facebook மற்றும் Instagram கணக்குகள் Hack செய்யப்பட்டுள்ளன.

அந்தக் கணக்குகளில் பெண்களின் அரை நிர்வாண புகைப்படங்கள் பல பதிவேற்றப்பட்டன. பின்னர் அந்தக் கட்சி அதன் சமூக ஊடகக் கணக்குகள் Hack செய்யப்பட்டதாக அறிவித்தது.

கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் கணக்குகளைப் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு சமூக ஊடக மேலாளரின் கணக்கு Hack செய்யப்பட்டு, இந்தப் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டதாகவும் கூறுகிறது.

இந்த அங்கீகரிக்கப்படாத படங்கள் அனைத்தும் 10 நிமிடங்களுக்குள் அகற்றப்பட்டதாகவும், இந்த விஷயம் Meta மற்றும் ஆஸ்திரேலிய சைபர் பாதுகாப்பு மையத்திற்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கட்சித் தலைவர் Sussan Ley தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு லிபரல் கட்சியில் உள்ள அனைவரும் மன்னிப்பு கேட்பதாகவும், வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...