Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன.
பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக புதிய அறிக்கை காட்டுகிறது.
கடந்த ஆண்டு, 2,272 இறப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் முக்கால்வாசிக்கும் அதிகமானவை போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்டவை ஆகும்.
இந்த இறப்புகளின் எண்ணிக்கை மாதத்திற்கு சுமார் 189 ஆகும். மேலும் போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் பெரும்பாலும் மாரடைப்பு மற்றும் முக்கிய தமனிகளில் அடைப்பு காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெரும்பாலான இறப்புகளில் ஈடுபடும் மிகவும் பொதுவான போதைப்பொருள் ஹெராயின் என்றும், இது மொத்த இறப்புகளில் 43.9% என்றும் Penington நிறுவனத்தின் தலைமை நிர்வாகி John Ryan கூறினார்.
இந்த இறப்புகளில் பெரும்பாலானவை தனியார் வீடுகளில் நிகழ்ந்துள்ளன, பெரும்பாலானவை பிராந்திய மற்றும் கிராமப்புற நகரங்களில் உள்ள வீடுகளில் நிகழ்கின்றன.
போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் தடுக்கக்கூடியவை என்றும், அரசு நிறுவனங்கள் இதில் சரியான கவனம் செலுத்த வேண்டும் என்றும் Penington நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.