நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Ozempic என்ற மருந்தை, நீண்டகால ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சையாகப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இத்தாலியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், type 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Ozempic மருந்து Liraglutide, 3 மாதங்களுக்கு ஒற்றைத் தலைவலி நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட வலியில் சிறந்த பலனைக் காட்டியது.
இந்த மருந்து, நோயாளிகள் மாதத்திற்கு அனுபவிக்கும் ஒற்றைத் தலைவலி நாட்களின் எண்ணிக்கையை 20% லிருந்து 11% ஆகக் குறைக்க முடிந்தது.
ஒற்றைத் தலைவலிக்கு உடல் பருமன் ஒரு ஆபத்து காரணி என்றாலும், இந்த மருந்து செயல்படுவதற்கு எடை இழப்பு காரணம் அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மண்டை ஓட்டில் அழுத்தம் குறைவதால் இது ஏற்படலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் சுமார் 5 மில்லியன் மக்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களை விட பெண்கள் இதனால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.
முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த வலி சில நிமிடங்கள் முதல் 3 நாட்கள் வரை நீடிக்கும் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.