குயின்ஸ்லாந்து மிருகக்காட்சிசாலையில் சிங்கம் தாக்கியதில் 50 வயது பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் Toowoomba-இற்கு அருகிலுள்ள பிரபலமான வனவிலங்கு பூங்காவான Darling Downs மிருகக்காட்சிசாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
அந்தப் பெண் கூண்டில் இருந்த பராமரிப்பாளர்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, குறித்த சிங்கத்தின் தாக்கத்தால் அந்தப் பெண் தனது கையை இழந்ததாக மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் கூறியிருந்தனர்.
துணை மருத்துவர்கள் அவளை பிரிஸ்பேர்ணில் உள்ள Princess Alexandra மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அந்த விலங்கு அதன் அடைப்பை விட்டு ஒருபோதும் வெளியே வரவில்லை என்றும், ஊழியர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் மிருகக்காட்சிசாலை கூறியது.