Newsபாசிப் பரவலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான உரிமக் கட்டணங்கள் குறித்து முடிவு

பாசிப் பரவலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான உரிமக் கட்டணங்கள் குறித்து முடிவு

-

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் பரவும் தீங்கு விளைவிக்கும் பாசிப் பூக்களால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கட்டுப்பாட்டுக் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Karenia mikimotoi என்ற நச்சுப் பாசியின் பரவல் மார்ச் மாதத்தில் முதன்முதலில் பதிவாகியது. இதனால் கிழக்கு Yorke தீபகற்பம், Fleurieu தீபகற்பம் மற்றும் கங்காரு தீவு போன்ற பகுதிகளில் மீன்கள் பலியாயின.

இந்தப் பாசிப் பூப்பினால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரைக்குத் திரும்பியுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் Susan Close கூறியுள்ளார்.

தெற்கு ஆஸ்திரேலிய தொழில்முறை மீனவர் சங்கம் இந்தக் கட்டணங்களை ரத்து செய்ததை வரவேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்களுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான உரிமம் மற்றும் தணிக்கை கட்டணங்களில் இருந்து $500,000 ஆரம்ப நிவாரணப் பொதியின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தெற்கு ஆஸ்திரேலிய தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் Port River இடம்பெயர்வு பகுதியில் உள்ள டால்பின்கள் ஆபத்தில் இல்லை என்று கூறியுள்ளது.

இருப்பினும், நீரின் தரத்தை துறை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...