Newsஅமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

-

அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது.

H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கிறது. அதேபோல, படிக்க வரும் மாணவர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் தனித்தனி விசாக்கள் உண்டு.

இதனிடையே, கடந்த ஜூலை 4ம் திகதி, வரிக்குறைப்பு மசோதா சட்டமாக்கப்பட்டதையடுத்து, தொழில்முனைவோர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். பணவீக்கத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்தக் கட்டணம் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியுரிமை இல்லாத விசா விண்ணப்பங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளோமேடிக் விசாக்கள் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் இந்த புதிய நடைமுறையினால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது. எனவே, அமெரிக்காவுக்கு சுற்றுலா மற்றும் கல்வி பயில்வோர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம்

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாகவும் இதனால் சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள்...

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...