வேட்டையாடும் பயணத்தின் போது சுடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணியளவில், தொலைதூர NSW இல் உள்ள Bourke-இல் இருந்து வடக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சொத்தில் ஒன்பது பேருடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒன்பது வயது சிறுவனின் வலது தொடையில் அடிபட்டது .
அவர் Bourke மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நிலையான நிலையில் உள்ளார்.
விக்டோரியாவைச் சேர்ந்த இந்தக் குழுவில், 37 முதல் 63 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்களும், ஒன்பது முதல் 15 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்களும் அடங்குவர்.
அந்தக் குழுவிலிருந்து air rifles, rifles மற்றும் ஒரு shotgun உட்பட 17 துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்தக் குழுவின் துப்பாக்கி உரிமங்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.