Newsஜப்பான் பொறியியலாளர்களின் புதிய உலக சாதனை

ஜப்பான் பொறியியலாளர்களின் புதிய உலக சாதனை

-

மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் நிலையில், 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G, 4G என அதிகரித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 1.02 Petabits இணைய வேகத்தை கண்டுபிடித்து ஜப்பான் பொறியியலாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். 1.02 Petabits என்பது ஒரு வினாடிக்கு சுமார் 1 மில்லியன் Gigabits ஆகும்.

இது இந்தியாவின் சராசரி இணைய வேகமான 63.55 MBPS ஐ விட 16 மில்லியன் மடங்கும் வேகமானது. இந்த இணைய வேகம் மூலம், Netflix தளத்தில் உள்ள அனைத்து படங்களையும் ஒரு நொடியில் Download செய்து விட முடியும்.

இந்த தொழில்நுட்பம் தற்போது ஆய்வக சோதனையில் இருந்தாலும், எதிர்கால தரவு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய படிக்கல்லாக இது பார்க்கப்படுகிறது. எனினும், இந்த அதிவேக இணையம் தற்போது பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இல்லை. இன்னும் பல ஆண்டுகள் இதற்கு பிடிக்கும் எனத்தெரிகிறது.

இந்த இணைய வேக சேவையை அடைய அவர்கள் ஆயிரத்து 800 கிலோ மீட்டருக்கும் அதிகமான 19-கோர் ஆப்டிக்கல் பைபர் கேபிளை பயன்படுத்தி உள்ளனர். இது, சராசரியாக லண்டனில் இருந்து ரோம் வரையிலான தூரத்துக்கு சமம்.

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் பெற்றுள்ள இந்த இணைய சேவை மூலம் ஒட்டுமொத்த Netflix வீடியோக்களையும் ஒரு விநாடியில் பதிவிறக்கம் செய்யலாம். 150GB உள்ள WarZone போன்ற வீடியோ கேம்களை கண் இமைக்கும் நேரத்தில் பதிவிறக்கம் செய்து விடலாம் என்றும் கூறப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...