Consumer-grade, Smart சாதனங்களுக்கு லேபிளிங் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்துறை அமைச்சகம் தயாராகி வருகிறது.
Smart சாதனங்களுக்கான புதிய லேபிளிங் திட்டம், மக்கள் வீட்டில் பயன்படுத்தும் சாதனங்களின் சைபர் பாதுகாப்பைப் புரிந்துகொள்வதையும் ஒப்பிடுவதையும் எளிதாக்கும்.
Smart சாதனங்களுக்கான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கட்டாய சைபர் பாதுகாப்பு தரநிலைகள் மார்ச் 2026 முதல் நடைமுறைக்கு வர உள்ளன.
இதில் இணைவது ஆஸ்திரேலியர்கள் மேம்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வைப் பெற உதவும் என்று துறை சுட்டிக்காட்டுகிறது.
Robot vacuums, Smart speakers மற்றும் Home security cameras போன்ற smart சாதனங்களிலிருந்து பாதுகாப்பான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆஸ்திரேலியர்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியும்.
கூட்டாளியான IoT அலையன்ஸ் ஆஸ்திரேலியா, இதற்காக $1.7 மில்லியன் ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டம் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் 2023-2030 ஆஸ்திரேலிய சைபர் பாதுகாப்பு உத்தியின் கீழ் ஒரு முக்கியமான படியாகவும் கருதப்படுகிறது.