தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், ஆஸ்திரேலியர்கள் இப்போது கூகிள் தேடலை அணுகும்போது தங்கள் வயதைச் சரிபார்க்க வேண்டும்.
இது இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய eSafety ஆணையர், தற்போது உருவாக்கப்பட்டுள்ள தரநிலைகளின் கீழ் பயனர்களின் வயது சரிபார்ப்பை ஒரு முக்கிய முன்னுரிமையாக மாற்றியுள்ளார்.
தொடர்புடைய வரைவுகள் கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்டன. மேலும் மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் Face Scan போன்ற தகவல்களும் கோரப்படலாம் என்று RMIT பல்கலைக்கழகத்தின் தகவல் அறிவியல் பேராசிரியரான லிசா கிவன் கூறினார்.
எதிர்காலத்தில் இது குறித்த தகவல்களை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.