டிரம்ப் நிர்வாகம் 1,000க்கும் மேற்பட்ட வெளியுறவுத்துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
அதன்படி, 1,107 அரசு ஊழியர்களும் 246 வெளிநாட்டு சேவை ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெளியுறவுத்துறையின் 1,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்தனர்.
இந்த பெரிய அளவிலான வெட்டுக்கள் துறை செய்யும் பணிகளை கடுமையாக பாதிக்கும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்தை மேற்கொண்ட அகதிகள் மற்றும் குடிவரவு பணியகத்தின் அனைத்து சிவில் சேவை அதிகாரிகளும் இந்த குறைப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிய மீள்குடியேற்ற முயற்சிகளுக்காக வெளியுறவுத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்தவர்களும் இந்த வெட்டுக்களில் அடங்குவர்.