அமெரிக்க கடைக்குள் புகுந்த திருடன் ஒருவன் $170,000க்கும் அதிகமான மதிப்புள்ள அரிய Pokémon அட்டைகளைத் திருடிச் சென்றுள்ளார்.
கடையின் கண்ணாடிக் கதவை உடைத்து அந்த நபர் உள்ளே நுழைவதும் CCTV கேமராக்களில் பதிவாகியுள்ளது.
கடை உரிமையாளர் Filipe Andre, மிகவும் மதிப்புமிக்க எட்டு முதல் பதிப்பு போகிமான் அட்டைகளைத் திருடியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும், திருட்டைச் செய்த நபர் 20 வினாடிகளுக்குள் தப்பிச் சென்றதால், இந்தக் கொள்ளை திட்டமிடப்பட்டதாக அவர் கூறினார்.
திருடப்பட்ட அட்டைகளைத் திருப்பித் தந்தால் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்றும் கடை உரிமையாளர் கூறினார்.