சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய வங்கி உயர் அதிகாரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஆன்லைனில் பாலியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வங்கி நிர்வாகி Christopher James McCann, 50, இன்று பிரிஸ்பேர்ண் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
சிட்னியில் வசிக்கும் சந்தேக நபர், கடந்த வியாழக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் குயின்ஸ்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டார்.
20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் நிதி நிர்வாகியாகப் பணியாற்றியவரும், நிதித் திறன்களைக் கருத்தில் கொண்டு தலைமறைவாகும் அபாயத்தில் உள்ளவருமான அந்த நபருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரினர்.
இருப்பினும், McCann-இற்கு முன் குற்றப் பின்னணி இல்லாததால், நீதிமன்றம் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கு ஆகஸ்ட் 4 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.