ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார்.
ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன எஃகு உற்பத்தியாளர்களுக்கும் இடையே நேற்று ஷாங்காயில் ஒரு வட்டமேசை கலந்துரையாடல் நடைபெற்றது.
குறைந்த கார்பன் எஃகு உற்பத்தியை மேம்படுத்த இரு நாடுகளைச் சேர்ந்த தொழில்துறைத் தலைவர்களும் இணைந்து பணியாற்றுமாறு ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானீஸ் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனமான Fortescue-இன் நிர்வாகத் தலைவர் Andrew Forrest, இருதரப்பு ஒப்பந்தம் எஃகுத் துறையில் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கக்கூடும் என்றார்.
பிரதமர் அல்பானீஸ் இன்று பெய்ஜிங்கில் சீனப் பிரதமர் லீ கெகியாங் மற்றும் அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பிரதமரின் 6 நாள் பயணம் முதன்மையாக வர்த்தகம் மற்றும் வணிக உறவுகள், இராணுவ நடவடிக்கைகள், மனித உரிமைகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.