Newsபாகிஸ்தானில் அரங்கேறிய இராமாயணம்!

பாகிஸ்தானில் அரங்கேறிய இராமாயணம்!

-

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில், இராமாயண நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதற்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

மௌஜ் என்ற நாடக குழுவினர் செயற்கை நுண்ணறிவின் உதவியுன் இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தனர். நாடகத்தை யோகேஸ்வர் கரேரா என்பவர் இயக்கியுள்ளார். இந்த நாடகத்துக்கு மக்கள் இடையே வரவேற்பும், விமர்சகர்களின் பாராட்டுகளும் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக யோகேஸ்வர் கூறுகையில், இராமாயணத்தை மேடையில் அரங்கேற்றியது சிறப்பானது. இதற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனால் எந்த பின்னடைவும், பாதுகாப்பு சவால்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இதேவேளை உமைர் அலவி என்ற விமர்சகர் கூறுகையில், ‘ கதை சொல்வதில் உள்ள நேர்த்தியிலும், நேரடி இசை , வண்ணமயமான உடைகள் மற்றும் மனதை தொடும் வடிவமைப்புகள் அனைத்தும் நிகழ்ச்சியின் பிரமாண்டத்துக்கு கூடுதல் அழகை கொடுத்தது. உலகெங்கும் உள்ள இலட்சக்கணக்கான மக்களை எதிரொலிக்கும் ஒரு நிகழ்வு என்பதால், சிறப்பாக அமைந்தது எனத் தெரிவித்தார்.

இராமாயண நாடகத்தை தயாரித்த ராணா காஸ்மி, சீதையாக நடித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

இறக்குமதி தடைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் 10 மில்லியனுக்கும் அதிகமான வேப்கள் பறிமுதல்

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தடை செய்யப்பட்டதிலிருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான வேப்களை பறிமுதல் செய்துள்ளதாக சிகிச்சை பொருட்கள் ஆணையம் மற்றும் ஆஸ்திரேலிய எல்லைப் படை (ABF)...

இனிப்பு பானங்களுக்கு சர்க்கரை வரி விதிக்க வேண்டும் என கோரிக்கை

அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் Type 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சோடாக்கள், cordials, energy drinks மற்றும் பழச்சாறுகள் மீது புதிய வரி...

ஆஸ்திரேலியாவிற்கு வரவுள்ள பிரபல அமெரிக்க துரித உணவு உணவகம்

பிரபல அமெரிக்க துரித உணவு பிராண்டான Auntie Anne’s அதன் முதல் ஆஸ்திரேலிய உரிமையாளர் கடையைத் திறக்க உள்ளது. இது ஜூலை 26 அன்று Westfield Parramatta...

ஆஸ்திரேலியாவில் இளம் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது குறித்து அறிக்கை

ஆஸ்திரேலியாவில் மூன்றில் ஒரு பங்கு இளம் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெல்போர்ன் சட்டக் கல்லூரியின் ஆய்வில், 30 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர்...

ஆன்லைனில் மருந்துச் சீட்டுகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது விசாரணை

எடை இழப்புக்கான மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்யும் நிறுவனங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கேள்வித்தாளை நிரப்பவும், சில புகைப்படங்களை அனுப்பவும், தொலைபேசி மூலம் மருத்துவரைத்...

நடிகை எம்மா வாட்சனுக்கு வேகமாக வாகனம் ஓட்ட தடை

ஹாரி பாட்டர் நடிகை Emma Watson வேகமாக வாகனம் ஓட்டியதாக பிடிபட்டதை அடுத்து, அவர் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான திரைப்பட உரிமையில் Hermione...