பெர்த்தில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்ததை அடுத்து சம்பவ இடத்திலிருந்து சென்ற கார் மோதி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு சற்று முன்பு பெர்த்தின் வடகிழக்கில் உள்ள Tonkin நெடுஞ்சாலையில் 40 வயதுடைய ஒருவர் “குறிப்பிடத்தக்க காயங்களுடன்” காணப்பட்டார்.
அவசர சேவைகள் அழைக்கப்பட்டபோதிலும் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்த நபர் எப்படி சாலையில் வந்தார் என்பதை விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒரு பெண் தற்போது காவல்துறையினரின் விசாரணைகளுக்கு உதவுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் Crime Stoppers-ஐ தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.