ஆஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் பயணி ஒருவர், கேபினுக்குள் பறவை பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு Arnhem Landல் உள்ள Gapuwiyak அருகே 44 வயது நபர் ஒருவர் ஹெலிகொப்டரில் பயணித்தார். ஆனால், Lake Evella விமான ஓடுபாதையில் ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்போது அதில் பயணித்த 44 வயது நபர் உயிரிழந்திருந்தார். இதுகுறித்து வடகிழக்கு பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், பறவை ஒன்று ஹெலிகொப்டர் கேபினுக்குள் பறந்ததால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
பயணி உயிரிழக்க, அதிர்ஷ்டவசமாக விமானி காயமின்றி உயிர்த்தப்பினார். அதிகாரி ஒருவர், விபத்து நடந்த நேரத்தில் ஹெலிகொப்டரில் இரண்டு பேர் இருந்ததை உறுதிப்படுத்தினார்.
ஆண் பயணி மீது பறவை மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், NT WorkSafe விசாரணையையும் தொடங்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது பிரேத பரிசோதனை அறிக்கை அதிகாரிகளுக்கு தயாராவதாக கூறப்படுகிறது.