News'கேப்டனின் தற்கொலை' - Air India விபத்து விசாரணை

‘கேப்டனின் தற்கொலை’ – Air India விபத்து விசாரணை

-

200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட Air India விமான விபத்து “கேப்டனின் தற்கொலை” காரணமாக ஏற்பட்டதாக ஒரு விமானப் போக்குவரத்து நிபுணர் நம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாத விபத்து தொடர்பான விசாரணையில் இருந்து புதிய தகவல்கள், மூத்த விமானி ஒருவர் விமானத்தின் இயந்திரங்களுக்கு எரிபொருள் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் switchகளை அணைத்துவிட்டதாகக் குறிப்பிடுகின்றன.

ஜூன் 12 அன்று 260 பேரைக் கொன்ற அகமதாபாத் விபத்து தொடர்பான விசாரணையின் மீதான அமெரிக்க அதிகாரிகளின் மதிப்பீட்டில், முன்னணி விமானி Sumeet Sabharwal மீது கவனம் திரும்பியுள்ளதாக Wall Street Journal தெரிவித்துள்ளது.

கருப்புப் பெட்டி (Black Box) கண்டுபிடிப்புகளின் பகுப்பாய்வின்படி, விமானம் 171 ஓடுபாதையில் இருந்து உயர்ந்த சிறிது நேரத்திலேயே கேப்டன் Sabharwal switchகளை “cut-off” நிலைக்கு நகர்த்தியதாக நம்பப்படுகிறது. ஏனெனில் கேப்டனால் மட்டுமே குறித்த switchகளை அணைத்திருக்க முடியும்.

விமானத்தை ஓட்டுவதில் துணை விமானி மும்முரமாக இருந்திருப்பார். விமானத்தை கண்காணிக்கும் மூத்த விமானி மட்டுமே இயந்திர switchகளை நகர்த்தும் திறன் கொண்டவராக இருந்திருப்பார்.

“இது நிச்சயமாக கேப்டனின் தற்கொலை என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று Sky News விமானப் போக்குவரத்து நிபுணர் Byron Bailey கூறினார்.

இந்தநிலையில், இறுதி அறிக்கை வெளியாகும் வரை, பொறுமையாக காத்திருக்குமாறு, இந்திய விமானிகள் கூட்டமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...