இஸ்ரேலில் விவசாய வேலைகளில் ஈடுபட்டிருந்த 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனைய 19 பேருக்கும் ஆபத்தான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர்கள் இஸ்ரேலில் உள்ள ஒரு வேலைப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, தீ விபத்துக்கான காரணம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேலும் அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தீ விபத்து இயந்திரக் கோளாறால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில், இது குறித்து அவசர அறிக்கையைப் பெறவும், காயமடைந்த நபருக்கு உதவவும் இலங்கை தூதரகம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.