Newsமாயமான பொம்மை, மரணமடைந்த அதிகாரி - Annabelle சாபமா?

மாயமான பொம்மை, மரணமடைந்த அதிகாரி – Annabelle சாபமா?

-

Annabelle திரைப்படத்தில் வரும் பேய் பொம்மை மாயமாகியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த பொம்மையை ஆய்வு செய்த பிரபல அமானுஷ்ய ஆய்வாளர் Dan Rivera மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Annabelle திகில் படம் உலகம் முழுவதும் பிரபலமானது. அமானுஷ்ய சக்திகள் நிறைந்த Annabelle பொம்மை சுற்றி நடக்கும் திகிலூட்டும் சம்பவங்களின் கலவையே இப்படத்தின் கதை.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த Annabelle பொம்மை திடீரென மாயமானதாக சமீபத்தில் இணையத்தில் வதந்திகள் பரவின.

பொதுவாக Warrens Occult அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் இந்த பொம்மை, கடந்த மே மாதம் லூசியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. இதற்கிடையில் பொம்மை காணாமல் போய்விட்டதாக வதந்தி கிளம்பியது. இதை மறுத்த Dan Rivera, இணையத்தில் வெளியான தகவல் அனைத்தும் பொய்யானது என்று தெளிவுபடுத்தினார்.

ஆனால் அதிர்ச்சியாக, கடந்த ஜூலை 13ஆம் திகதி பென்சில்வேனியாவின் கெட்டிஸ்பர்க்கில் உள்ள ஹோட்டல் அறையில் Dan Rivera உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணை அதிகாரிகள் கூறுகையில், “மரணத்தின் காரணம் இன்னும் தெரியவில்லை. சந்தேகத்திற்குரிய எந்த ஆதாரமும் இல்லை. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்துக்குப் பிறகு, இணையவாசிகள் “Dan Rivera மரணத்திற்கு Annabelle பொம்மை தொடர்புண்டா?” என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த மரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், Annabelle பொம்மை பாதுகாப்பாக இருப்பதாக TikTok வீடியோவையும் வெளியிட்டிருந்தார். மேலும்  ஒக்டோபரில் இல்லினாயில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் Annabelle பொம்மை பங்கேற்கும் எனவும் அறிவித்திருந்தார்.

Latest news

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...