கரும்புச் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்பட்ட புதிய Coke-ஐ வெளியிடப்போவதாக Coca-Cola உறுதிப்படுத்தியுள்ளது.
Coca-Colaவில் உள்ள பொருட்களில் மாற்றங்களைக் கொண்டுவருமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, Coca-Cola எதிர்காலத்தில் கரும்புச் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்பட்ட பானத்தை வழங்கத் தயாராகி வருகிறது.
இருப்பினும், Cokeன் சில பானங்கள் ஏற்கனவே கரும்புச் சர்க்கரையைப் பயன்படுத்துகின்றன, அவற்றில் மெக்சிகோவில் விற்கப்படும் Coca-Colaவும் அடங்கும்.
ஆனால் இன்றைய அறிவிப்பு, Cokeன் முக்கிய செய்முறை மாறாது என்பதையும், அது தொடர்ந்து அதிக fructose corn syrup-ஐ பயன்படுத்தும் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
அதிக fructose corn syrup உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் என்று ஒரு அமெரிக்க மருத்துவர் கூறினார்.