விக்டோரியாவில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து வைக்கோல் லாரியுடன் மோதி கவிழ்ந்துள்ளது.
இன்று காலை சுமார் 8.50 மணியளவில் Horshamக்கு அருகிலுள்ள Minyip-இல் இந்த விபத்து நடந்ததாகவும், அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாகவும் விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.
மூன்று குழந்தைகளும் ஒரு பெண்ணும் பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் சிக்கிய ஓட்டுநரை விடுவிக்க அவசர சேவைகள் செயல்பட்டு வருகின்றன.
ஓட்டுநர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு பேர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மற்றொரு நபர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் விக்டோரியா ஹெல்த் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.
இந்த பேருந்து Warracknabeal சிறப்பு மேம்பாட்டுப் பள்ளியைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

