ஆஸ்திரேலிய எல்லையில் 46 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜூன் 24 முதல் ஜூலை 15 வரை நியூ சவுத் வேல்ஸ் எல்லையில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட இந்த சிகரெட்டுகளின் மதிப்பு சுமார் 31 மில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது.
பெரிய அளவிலான சட்டவிரோத புகையிலை இறக்குமதியைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகிறது.
அதன்படி, இந்த சட்டவிரோத சிகரெட்டுகள் நிரப்பப்பட்ட நான்கு கொள்கலன்களை ஆஸ்திரேலிய எல்லைப் படை (ABF) பறிமுதல் செய்துள்ளது.
அரசாங்கத்தை ஏமாற்றும் நோக்கத்துடன் புகையிலை பொருட்களை இறக்குமதி செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் 42 வயதுடைய நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.