Perthபெர்த்தில் மாரடைப்பு ஏற்பட்ட நபரை உடனெடியாக காப்பாற்றிய தமிழ் மருத்துவர் பழனியப்பா...

பெர்த்தில் மாரடைப்பு ஏற்பட்ட நபரை உடனெடியாக காப்பாற்றிய தமிழ் மருத்துவர் பழனியப்பா சுரேஷ்

-

Kambalda-ஐ சேர்ந்த Rick Bell என்ற 72 வயதான நபர் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து விரைவாக மருத்துவமனைக்கு சென்றதால் உயிர் தப்பிய அனுபவம் குறித்து ஊடங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்றவரும் பகுதிநேர ஆய்வாளராகப் பணியாற்றியவருமான Rick Bell, கடந்த மார்ச் 10ம் திகதி மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி ஏற்பட்ட பிறகு Kambaldaவில் உள்ள  St John General Practice clinic-இற்கு வந்தார்.

Rick Bell ஒரு தன்னார்வ ஆம்புலன்ஸ் உதவியாளராக இருந்ததால், தனக்கு ஏற்பட்ட அரிகுறிகள் மாரடைப்புக்கானவை என புரிந்துகொண்டார். அதனால் அவர் காரில் ஏறி, மருத்துவமனைக்கு போன் செய்து, ‘எனக்கு மாரடைப்பு ஏற்படுவது உறுதியாகிவிட்டது, நான் போய்க்கொண்டிருக்கிறேன்’ என்று மருத்துவமனைக்குச் கூறினார்.

மருத்துவமனைக்கு வந்த சில நிமிடங்களில், திரு. Bell மருத்துவ ஊழியர்களால் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

தன்னார்வ ஆம்புலன்ஸ் அதிகாரிகளும் சமூக துணை மருத்துவரும் வரும் வரை, மற்ற மருத்துவ நிபுணர்களும் தன்னார்வலர்களும் திரு.Bell-இற்கு இதய நுரையீரல் புத்துயிர் அளிக்க உதவியதுடன், மருத்துவர் பழனியப்பா சுரேஷ் சுமார் எட்டு நிமிடங்கள் அவருக்கு இதய நுரையீரல் புத்துயிர் அளித்தார்.

பின்னர் திரு.Bell Kalgoorlie Health Campus-இன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து பெர்த்திற்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் கழித்து quadruple bypass அறுவை சிகிச்சை செய்து மீண்டார்.

திரு.Bell-இன் உயிரைக் காப்பாற்ற உதவிய முதல் மீட்புக் குழுவினர், அவர்களின் குழுப்பணி மற்றும் தொழில்முறைக்காக அங்கீகரிக்கப்பட்டு, St John WA பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.

ஊழியர்களுக்கு, குறிப்பாக டாக்டர் சுரேஷுக்கு, தான் “மிகவும் நன்றியுள்ளவனாக” இருப்பதாக அவர் கூறினார், அவர்களுக்கு அவர் திறந்த கரங்களுடன் நன்றி தெரிவித்தார் திரு.Bell.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...