எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்காக டிரம்பிற்கு நன்றி தெரிவித்த தாய்லாந்து பிரதமர் பும்தம் வெஜ்ஜாரி, கம்போடியாவிடமிருந்து நேர்மையான பதிலை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
எல்லை மோதல்கள் தொடர்ந்தால் கம்போடியா மற்றும் தாய்லாந்துடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட மாட்டேன் என்றும் டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவாதத்தின் தேதி, நேரம் மற்றும் இடத்தை வெள்ளை மாளிகை அறிவிக்கவில்லை, மேலும் தாய்லாந்து மற்றும் கம்போடிய தூதரகங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.
தாய்லாந்தும் கம்போடியாவும் 817 கி.மீ எல்லை தொடர்பாக பல தசாப்தங்களாக மோதலில் ஈடுபட்டுள்ளன.