பெர்த்தின் Forrestfield-இல் உள்ள ஒரு வீடு, லித்தியம் அயன் பேட்டரியால் ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
குடியிருப்பாளர்கள் உயிர் பிழைத்துள்ளனர், ஆனால் ஒருவர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது, அப்போது ஒரு தம்பதியினர், அவர்களது 12 மாத குழந்தை மற்றும் இரண்டு நாய்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தன.
அக்கம்பக்கத்தினரின் உதவியால் அவர்கள் விரைவாக வீட்டை விட்டு வெளியேற முடிந்தது.
தீ விபத்துக்கான காரணம் ஒரு மின் கருவியில் இருந்த லித்தியம்-அயன் பேட்டரி என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட 107வது வீட்டு தீ விபத்து இதுவாகும்.