Newsகாஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

-

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து பரிசூட் மூலம் நிவாரணப் பெட்டிகள் கீழே விடப்படும் காட்சிகளை இஸ்ரேல் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

பலஸ்தீன பகுதிகளில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகளை தணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், காஸாவுக்கு மீண்டும் விமான உதவித் திட்டங்களை தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் இயக்கத்துடன் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல், சமீபகாலமாக காஸாவுக்கான அனைத்து நிவாரணப் பொருட்களின் அனுப்புதலையும் நிறுத்தியிருந்தது. இதன் விளைவாக, சுமார் 20 இட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தீவிரமான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, தற்போது மீண்டும் உணவு மற்றும் அவசர நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும், விநியோக மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நேரடியாக உதவி வழங்கப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், காஸா மக்களின் நிலையை சிறிதளவாவது சீரமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

விக்டோரியாவில் அறிமுகமாகும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஆம்புலன்ஸ்

நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Neuro-Inclusion Toolkit ஆம்புலன்ஸ் விக்டோரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நரம்பியல் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் இருந்தே மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

பாசிகளால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு $100,000 வரை மானியம்

தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் கடற்கரையோரப் பகுதிகளில் நீடிக்கும் நச்சுப் பாசிப் பூக்களால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு புதிய கட்ட நிதி உதவியை அறிவித்துள்ளது. உள்ளூர் வணிகங்களில் இந்த நச்சுப்...

மேற்கு விக்டோரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது நபர்!

Bendigo-இற்கும் Horsham-இற்கும் இடையிலான மேற்கு விக்டோரியன் நகரமான St Arnaud-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் Kings...

மெல்பேர்ண் அலுவலகத்தைத் தாக்கியுள்ள இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தளவாட நிறுவனங்களில் ஒன்றின் தலைமையகத்தை இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்வலர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மெல்பேர்ணில் உள்ள Toll குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. சமூக ஊடகங்களில்...