ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சுற்றுப்பாதை ராக்கெட்டான Eris, வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Bowen நகரத்திலிருந்து ஏவப்பட்ட 14 வினாடிகளில் விழுந்து நொருங்கியது.
இந்த ராக்கெட் சோதனை விமானம் Gilmour Space Technologies-ஆல் மேற்கொள்ளப்பட்டது மற்றும் சிறிது நேரத்திற்குப் பிறகு தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது.
இது ஆஸ்திரேலியாவின் விண்வெளி தொழில்நுட்பத்திற்கு ஒரு புதிய படியாகக் கருதப்பட்டாலும் , முதல் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இது ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விண்வெளித் திறன்களுக்கு ஒரு பெரிய படியாகும் என்று Gilmour Space Technologies கூறுகிறது .
இந்த ஆண்டு பல ராக்கெட் ஏவுதல்கள் முயற்சிக்கப்பட்டதாகவும், ஆனால் வானிலை மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தாமதமானதாகவும் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
எதிர்காலத்தில் வணிக மற்றும் அரசு செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் அனுப்பும் நோக்கத்துடன் நிறுவனம் இதுபோன்ற முயற்சிகளைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.