சிட்னியின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள Bronte கடற்கரையில் ஒரு பெரிய பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக கீழே உள்ள கடற்கரையில் அதிக அளவு பாறைகள் விழுந்தன.
பாறை சரிவு ஏற்பட்ட நேரத்தில் அருகில் யாரும் இல்லை என்பதை Waverly கவுன்சில் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நிலச்சரிவுக்கான காரணம் இன்னும் விசாரணையில் இருந்தாலும், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பாறை சரிந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த சம்பவத்தில் ஒரு culvertம் பாதுகாப்பு தண்டவாளமும் மோசமாக சேதமடைந்தன.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே Waverly கவுன்சில் ஊழியர்களும், Bronte உயிர்காப்பாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.