இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய மின்னல் தாக்குதல் ஒன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
கிழக்கு டெக்சாஸிலிருந்து கன்சாஸ் நகரம் வரை 829 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்னல் தாக்கியதாக உலக வானிலை அமைப்பு (WMO) உறுதிப்படுத்தியது.
இது முந்தைய சாதனையை 61 கிலோமீட்டர்கள் தாண்டியது.
இந்த மின்னல் தாக்குதல் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து மெல்பேர்ண் வரையிலான தூரத்திற்கு அருகில் உள்ளது.
இதுபோன்ற பெரிய மின்னல் தாக்குதல்கள் விமானப் பயணத்திற்கும் வெப்பமண்டல காட்டுத் தீ தொடங்குவதற்கும் ஆபத்தை விளைவிக்கின்றன என்று WMO கூறுகிறது.
இதுபோன்ற megaflash மின்னல் தாக்குதல்கள் அவற்றின் தோற்றத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பரவுவதால், ஒரு பெரிய நிலப்பரப்பு ஆபத்தில் உள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.