ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இரண்டு அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா அருகே நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி Dmitry Medvedev-இன் மிகவும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவில் எல்லாம் நன்றாக இருப்பதாகவும், அது அதன் சொந்த பாதையைப் பின்பற்றுவதாகவும் மெட்வெடேவ் கூறியிருந்தார்.
முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி, ரஷ்யா இஸ்ரேல் அல்லது ஈரான் அல்ல என்றும், ஒவ்வொரு புதிய இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தல் மற்றும் போரை நோக்கிய ஒரு படி என்றும் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை என்றும், அவை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும், ஆனால் இது அந்த மாதிரியான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்காது என்று அவர் நம்புகிறார் என்றும் சமூக ஊடகங்களில் கூறினார். (“Words are very important, and can often lead to unintended consequences, I hope this will not be one of those instances.”)
உக்ரைனுடனான போரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள மாஸ்கோவை அழுத்தம் கொடுக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ரஷ்யாவுக்கு பயணம் செய்வார் என்று கூறிய டிரம்ப், முன்னேற்றம் ஏற்படாவிட்டால் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
அந்த நடவடிக்கைக்கு அவர் வழங்கிய 50 நாள் காலக்கெடுவை 10 நாட்களாகக் குறைக்க டிரம்ப் சமீபத்தில் முடிவு செய்தார்.