ஆஸ்திரேலியாவை அடைய ஒவ்வொரு ஆண்டும் 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமாகப் பறந்து செல்லும் ஒரு இடம்பெயர்வு கரையோரப் பறவை அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளது.
கடந்த 23 ஆண்டுகளில் இந்தப் பறவையின் எண்ணிக்கை சுமார் 77% குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது ஜூலை 2025 இறுதியில் NSW அச்சுறுத்தப்பட்ட உயிரின அறிவியல் குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இடம்பெயர்ந்து செல்லும் பறவையான கருப்பு வால் கொண்ட Godwits, சைபீரியாவிலிருந்து ஆஸ்திரேலிய கடற்கரைகள் மற்றும் நியூ சவுத் வேல்ஸின் சதுப்பு நிலங்களுக்கு மணிக்கு 95 கிமீ வேகத்தில் பறக்கின்றன.
வருடத்திற்கு இரண்டு முறை இடம்பெயரும் இந்தப் பறவை, ஈரநிலங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் கடலுக்கு அருகில் வாழ்கிறது.
Grey Plover, Ruddy Turnstone,Sharp-tailed Sandpiper மற்றும் Red Knot உள்ளிட்ட நான்கு பறவைகளும் அழிந்து வரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.