உலகின் பழமையான கருவில் இருந்து பிறந்த குழந்தை அமெரிக்காவிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 26, 2025 அன்று பிறந்த அந்தக் குழந்தைக்கு Thaddeus Daniel Pierce என்று பெயரிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 30 வருடங்களாக ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த ஒரு கருவில் இருந்து அந்தக் குழந்தை பிறந்தது.
இந்தக் கரு 1994 இல் உருவாக்கப்பட்டது மற்றும் நவம்பர் 2024 இல் ஓஹியோவில் வசிக்கும் லிண்ட்சேயின் கருப்பையில் மாற்றப்பட்டது.
இந்தக் கரு 1990களில் IVF (In Vitro Fertilisation) சிகிச்சைக்குப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் IVF மற்றும் உயிரியல் சேமிப்பு தொழில்நுட்பம் குறித்து உலகம் முழுவதும் புதிய கவனத்தைத் தூண்டியுள்ளது.