குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு, தெற்கு ஆஸ்திரேலிய நபர் ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்து பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
Bordertown சமூகத்திற்கு, Shafeeqa Shah-உம் Mirza Husseini-யும் ஒரு நல்ல தம்பதியினர். அந்த சிறிய நகரத்தில் ஆறு குழந்தைகளை வளர்த்தனர்.
ஆனால் மூடிய கதவுகளுக்குப் பின்னால் துஷ்பிரயோகத்தின் ஒரு துயரமான வரலாறு இருந்ததாக போலீசார் கூறுகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 47 வயதான Husseini மற்றும் 41 வயதான Shah ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
தம்பதியினரைத் தொடர்பு கொள்ள முடியாததால் உறவினர்கள் போலீஸைத் தொடர்பு கொண்டனர்.
இரவு 11 மணிக்கு வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள், இருவரின் உடல்களையும் கண்டுபிடித்து, அன்று அந்த ஜோடி இறந்துவிட்டதாகக் கூறினர்.
துப்பறியும் நபர்கள் மரணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் தொடர்புடைய வேறு யாரையும் தேடவில்லை.